100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி

1

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை அருகே உள்ள கர்ஜத் எனும் பகுதியில் 'நீடா முகேஷ் அம்பானி அனந்த் ஆஷ்ரய்' என்ற பிரமாண்ட குடியிருப்பு நகரத்தை உருவாக்க ரிலையன்ஸ் பவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது.

100 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட இந்த குடியிருப்புக்கான அடிக்கல்லை ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவர் நீடா அம்பானி நாட்டினார். இந்தத் திட்டமானது லாப நோக்கமற்ற முறையில் பல கட்டங்களாக உருவாக்கப்பட இருக்கிறது.

முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் என சுமார் 5000 பேர் தங்கும் வகையில், இந்தக் குடியிருப்பானது அமைக்கப்பட இருக்கிறது. அதேபோல, பராமரிப்பாளர்கள், உதவி ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் என 15 ஆயிரம் பேர் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப தேவையான நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisement