உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்க விண்ணப்பம் வரவேற்பு

சென்னை: ‘பழங்குடியின விவசாயிகளுக்காக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்க, விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன’ என, தமிழக பழங்குடியினர் நல இயக்குநர் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக அரசின் பழங்குடியினர் நல இயக்குனரகம் சார்பில், நடப்பு ஆண்டுக்கான அறிவிப்பின்படி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருவண்ணா மலை, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், நீலகிரி, கோவை, திருவள்ளூர் ஆகிய, 10 மாவட்டங்களில், பழங்குடியின விவசாயிகளுக்காக, 10 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக தகுதியுள்ள முகமைகள், நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் தனிநபர் வல்லுநர்களிடமிருந்து விலைப்புள்ளிகள் வரவேற்கப் படுகின்றன.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், விலைப்புள்ளி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, சென்னை, எழிலகத்தில் உள்ள பழங்குடியினர் நல இயக்குநருக்கு, தபால் வாயிலாக அனுப்ப வேண்டும். அதன் நகலை, tntribalwelfare2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, நவம்பர், 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement