மது குடித்ததை தட்டிக்கேட்ட தாயை கொன்ற மகன் கைது
ஆற்காடு: மது குடித்ததை தட்டிக்கேட்ட அம்சா, 70, என்பவரை, அவரது மகன் வினோத்குமார், 35, கத்தியால் குத்தி கொலை செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, குளத்துமேடுவை சேர்ந்தவர் அம்சா. கடந்த ஒரு மாதத்திற்கு முன், கணவர் இறந்த நிலையில் மூன்று மகன்களுடன் வசித்தார்.
இவருடைய மூத்த மகன் வினோத்குமார். இவர், தினமும், மது குடித்து விட்டு, அம்சாவுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (அக்.,24) இரவு, வினோத்குமார் மதுபோதையில் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதை தட்டி கேட்ட அம்சாவை, வீட்டில் மாட்டி வைத்திருந்த தன் தந்தையின் போட்டோ பிரேமை எடுத்து, வினோத்குமார் அடித்துள்ளார்.
இதில், நெற்றியில் வெட்டு காயம் ஏற்பட்டு, அம்சா கீழே விழுந்தார்.
மேலும், வினோத்குமார் கத்தியால் அம்சாவை குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆற்காடு போலீசார், வழக்கு பதிந்து, வினோத்குமாரை கைது செய்தனர்.
மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்