கடற்கரையில் தவித்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் தவித்து நின்ற சிறுவனை கடலோர காவல்படை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஆந்திராவை சேர்ந்தவர் சத்யா, இவர் குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். புதுச்சேரி டுப்லெக்ஸ் கடற்கரை அருகில் இன்று (அக்.,24) உட்கார்ந்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர். இவர்களுடன் இருந்த இவரது 9 வயது மகன் காணாமல் போனார்.

பதறிபோன சிறுவனின் பெற்றோர் பாதுகாப்பு பணியில் இருந்த லைப் கார்டு புத்துப்பட்டான், முத்துக்குமார் ஆகியோரிடம் தெரிவித்தனர்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அச்சிறுவன் காந்தி சிலை அருகில் நின்றதை போலீசார் கண்டுபிடித்து, அவரை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement