பா.ஜ.,வுக்கு எதிராக அண்ணாமலை அறிக்கை: மூத்த தலைவர்கள் வருத்தம்!
புதுடில்லி: 'வீ த லீடர்ஸ்' தலைவரும், முன்னாள் தமிழக பா.ஜ., தலைவருமான அண்ணாமலை குறித்து, டில்லி பா.ஜ., வட்டாரங்களில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் பா.ஜ.,விற்கு எதிராக அவர் விடுத்துள்ள அறிக்கை, பல மூத்த தலைவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
'அண்ணாமலையின், 'என் மண்; என் மக்கள்' யாத்திரைக்கு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பெரும் ஆதரவு அளித்ததுடன், பார்லி.,யிலும் அண்ணாமலையை பாராட்டி பேசியுள்ளார் மோடி. அப்படியிருக்க அண்ணாமலை ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?' என, பா.ஜ., மூத்த தலைவர்கள் வருத்தப்படுகின்றனர்.
இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், மூத்த தலைவர் ஒருவர் கேட்டபோது, 'அண்ணாமலை பற்றி நான் ஏற்கனவே சொன்னதுதான் இப்போது நடக்கிறது. அவருக்கு பொருளாதார ரீதியாக ஏதோ ஆபத்து வரும் போலிருக்கிறது. அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே, இப்படி கட்சிக்கு எதிராக பேசி வருகிறார்' என்றாராம் அமித் ஷா.
'தமிழக பா.ஜ., பார்வையாளராக நியமிக்கப்பட்ட ராம் மாதவ், கள நிலவரம் தொடர்பான தன் அறிக்கையை சமர்ப்பித்து விட்டார்' என்று, செய்திகள் அடிபடும் நிலையில், 'அப்படி எந்த அறிக்கையும் அளிக்கவில்லை' என்கின்றனர், அமித் ஷாவிற்கு நெருக்கமானவர்கள்.
'தமிழக மாவட்டங்கள் அனைத்திற்கும் ராம் மாதவ், 'விசிட்' செய்து அறிக்கை தருவார். ஜனவரியில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி தலைமை கேட்டுள்ளது. அதுவரை நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ., தலைவராக நீடிப்பார்' என்கிறது டில்லி பா.ஜ., வட்டாரங்கள்.
வாசகர் கருத்து (18)
Murugesan - Abu Dhabi,இந்தியா
25 அக்,2026 - 09:18 Report Abuse
தங்கள் கட்சிச் தலைவரை அடுத்த கட்சி ஊழல்ர அயோக்கியர் நீக்கினால் தான் கூட்டணி என்றவுடன் நீக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பதவிக்காக உள்குத்து கூட்டணி போட்டு வேலை செய்தது பாஜாக, மோடி ஆட்சிக்கு வந்து எந்த ஒரு ஊழல் திருட்டு அரசியல் வாதிகளையும் சிறையில் போட முயற்சிக்கவில்லை . 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
25 அக்,2026 - 08:46 Report Abuse
அண்ணாமலை பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால் அதனால் அவருக்கு பாஜ B டீம் என்று பெயர் வருமாம் ...அதற்கு பதிலாக திராவிடனுங்க போல சமூக நீதி மத சார்பின்மை கொள்கை முடிவை அண்ணாமலை எடுத்தால் அவருக்கு திராவிடனுங்க B டீம் என்று பெயர் வராதா ??.... 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
25 அக்,2026 - 08:41 Report Abuse
பொருளாதார ரீதியாக ஏதோ ஆபத்து வரும் போலிருக்கிறதாம் . அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே, இப்படி கட்சிக்கு எதிராக பேசி வருகிறார் என்றாராம் .....இப்படி பேசுவது ஒரு வேளை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பாதுகாத்து கொள்ள திட்டமா?? .... 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
25 அக்,2026 - 08:38 Report Abuse
யார் எந்த தவறு செய்திருந்தாலும் நேற்று ஒரு நிலைப்பாடு இன்று ஒரு நிலைப்பாடு என்று இருந்தால் அது அரசியலில் எடுபடாது ....இது அண்ணாமலைக்கு புரிய வேண்டும் ....
பாஜக என்பது அமித்ஷா மட்டும் கிடையாது .... திராவிடனுங்க கட்சி போல பாஜக ஒரு குடும்ப கட்சி கிடையாது ....உலகில் நூறு ஆண்டுகளுக்கு மேல் எந்த ஒரு இயக்கமும் நின்று நீடித்து ஜெயித்தது கிடையாது .. 0
0
Reply
Krishna Gurumoorthy - CHENNAI,இந்தியா
25 அக்,2026 - 08:37 Report Abuse
₹200 party 0
0
Reply
J swaminathan - Thanjavur,இந்தியா
25 அக்,2026 - 08:12 Report Abuse
இப்படி செய்தால் தான் அண்ணாமலை மீது நம்பிக்கை வரும். அதற்காக இந்த நாடகம். நேரடியாக பிஜேபி என்றால் ஓட்டு விழுவதில்லை. இப்படி மாறுவேசம் போட்டால் பலன் இருக்குமா? 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
25 அக்,2026 - 07:40 Report Abuse
திஜக என்பது விஷம் தோய்ந்த வாள். அது அண்ணாமலை மட்டுமல்ல மோடி, அமித்ஷா போன்றோரைக்கூட காயப்படுத்தி இருக்கிறது. கூடுதலாக தீம்க்கா குடும்பத்துக்கு மேலிடத்தில் சிலரிடம் இன்னும் ஆதரவு இருக்கிறது. ஆகவே இது மிக சிக்கலான விஷயம். இது கட்சியை தவிர்த்து, தேசத்தை மட்டுமே முன்னிறுத்தி சிந்திக்க வேண்டிய விஷயம். மோடியும், அமித்ஷாவும் சேர்ந்து முடிவு செய்தால் நாட்டுக்கு நல்லது. 0
0
Reply
ravi varada - ,இந்தியா
25 அக்,2026 - 07:23 Report Abuse
பிஜேபி எப்படியும் திமுக உடன் கூட்டணி வைக்கும்
அண்ணாமலை செய்வது சரியான ரூட் 0
0
Reply
Krishna - bangalore,இந்தியா
25 அக்,2026 - 07:01 Report Abuse
SHAMEFUL BJP SITUATION 100% TRUE: Actually BJP Developed by Advani on Peoples Problems incl AyodhyaRam is Hijacked by AntiPeople DictatorDuos. Now BJP Lost Peoples Support Due to Extensive PowerMisuses& Scientific MegaLoots even Against Common People Using Police, Bureaucrats, CourtJudges etc. Now ModiBJP Doesnt Care about Supporting People& OwnCadres WINS ONLY by EVM-SIR FRAUDS incl Billions of FreebiesBribed Voters-ModiAadhar Regularised Foreigners. DictatorDuos Even Sidelined/Removed Annamalaiji, &NowMurugan etc Despite Developing TN BJP from 2% to 11% VoteBase Party even Overtaking ADMK 0
0
Reply
செந்தூரான் - ,
25 அக்,2026 - 05:30 Report Abuse
இன்றைக்கு மத்தியில் பா.ஜ. அரசுக்கு முழு மெஜாரிட்டி கிடைக்காமல் போனதற்கு காரணமே அண்ணாமலைதான். மாநிலத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக நன்றாக போய் கொண்டிருந்த அ.தி.முக, பா.ஜ.கூட்டணியை உடைத்தவரே அண்ணாமலை தான். தேவையே இல்லாமல் அண்ணா,எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விமர்சித்தது மட்டுமல்லாமல் அ.தி.மு.க தலைவர் எடப்பாடியை அவரது வயது,முன்னாள் முதல்வர் என்று கூட பார்க்காமல் இன்றைக்கு த.வெ.கவினரை விமர்சிக்கும் ஒரு வார்த்தையால் அண்ணாமலை விமர்சித்ததுதான் அ.தி.மு.க, பா.ஜ.கூட்டணி உடைய முக்கிய காரணமே.கூட்டணி நீடித்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பத்து சீட்டுகளையாவது ஜெயித்திருக்கும். 0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
Advertisement
Advertisement