சரியான 'ரூட்'டில் பயணிக்கிறார் விஜய்!

19

சென்னை: டாக்டர் அர்த்தநாரி பிரபுராஜ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சமீபத்தில் நடந்த இரண்டு தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றிவிட்டது.

இதற்குக் காரணம் என்ன...

ஜாதிய கட்சிகளை தோளில் சுமந்து வளர்த்து விட்ட பெரிய கட்சிகள், தங்களின் அரசியல் பாதையை, மிகப் பெரிய தேர்தல் தோல்விக்குப் பின்னும் மாற்றிக் கொள்ளாததே!

மற்றொருபுறம், மத்தியில் ஆட்சி செய்யும், பா.ஜ.,வை மதிக்காமல், இவ்வளவு ஆண்டு காலம் சுயலாபத்துக்காக, தமிழக மக்களைத் தவிக்க விட்டு, ஆட்சி செய்ததும் மிக முக்கிய காரணம்.

இந்த இரு பெரிய கட்சிகளை வீட்டுக்கு அனுப்பிய விஜய், எப்படி லாவகமாக மத்திய அரசைக் கையாள்கிறார் பாருங்கள்...

காங்., - எம்.பி., ராகுல் சென்னை வந்தபோது, 'கூட்டணி தலைவரா... வாங்க வாங்க... ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்' என, ேஹாட்டலுக்கு அழைத்துச் சென்று, டீ, பிஸ்கட் வாங்கிக் கொடுத்தார். அடுத்த நாளே, பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமர் மோடி வந்தபோது, மிக கவனமாக, விமான நிலையத்துக்கே சென்று அவரை வரவேற்று, அவர் கூடவே இருந்து, மீண்டும் விமான நிலையம் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்ததாகட்டும்...

நடந்த நிகழ்ச்சிகளினுாடே, தமிழகத்துக்குத் தேவையானவற்றை, அழகாக ஆங்கிலத்தில், மோடிக்குப் புரியும் வகையில் கோரிக்கைகளாக வைத்து அசத்தியதாகட்டும்... இந்த சின்னப்பிள்ளையிடம், 'பெரிய தலை'கள் பாடமல்லவா கற்க வேண்டும்!

மாநிலத்துக்கு என்ன தேவை என யோசிப்பதை விட்டுவிட்டு, அரசியல் செய்கிறேன் பேர்வழி என்ற சிந்தனையிலேயே, எல்லாவற்றையும் கோட்டை விட்ட பெருமை, நம், 'பெரிய தலை'களையே சேரும்!

இப்போது மட்டுமல்ல... தி.மு.க.,வின் 'முதுபெரும்' தலைவராக இருந்த கருணாநிதி, முன்பு வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தபோதும், அதன் பின், காங்கிரசின் மன்மோகன் அரசில் அங்கம் வகித்தபோதும், கோதாவரி - கிருஷ்ணா - காவிரி இணைப்புக்கு பேச்சு வார்த்தை நடத்தி, சாதித்திருக்க வேண்டாமா? செய்யவே இல்லையே?

இப்போது கிருஷ்ணா நதிநீரை தமிழகத்திற்குப் பெறுவதற்காக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார், முதல்வர் விஜய்.

மாநிலத்தில் பல சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, சரியான, 'ரூட்'டில் பயணிக்கிறார்!

ஜாதிக் கட்சிகளிடம் சிக்கி, சின்னாபின்னமாவதை விட, இப்படி தமிழகத்திற்காக உழைக்கும் முதல்வருக்கு தான், தமிழகத்தில் இனி எதிர்காலம். 'பெரிய தலை'கள் புரிந்து கொண்டால் நல்லது; இல்லையெல் உருண்ட தலைகள் மீண்டெழ வாய்ப்பே இல்லை!

Advertisement