அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகி கள் தேர்வு நேற்று நடந்தது. பள்ளி கல்வி துறையின் நடைமுறைகளின் படி எஸ்.எம்.சி., உறுப்பினர்களின் தேர்வு, பள்ளி தலைமை ஆசிரியர் நளினி, பி.டி.ஏ., தலைவர் பையாஸ் பாஷா, துணைத்
தலைவர் அறிவு, பொருளாளர் மோகன்குமார், முன்னாள் எஸ்.எம்.சி., தலைவி ஞானமேரி, உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் நடந்தது.
இதில், புதிய எஸ்.எம்.சி., தலைவியாக நித்யா தேர்வு செய்யப்பட்டார். மேலும், 23 உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்
களுக்கு தலைமை ஆசிரியர் நளினி மற்றும் பி.டி.ஏ., தலைவர் பையாஸ் பாஷா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர்.

Advertisement