நிறுவன செய்திகள்

கே.இ.சி., நிறுவனத்துக்கு ரூ.2,872 கோடி ஆர்டர்

மின் இணைப்பு கோபுரங்கள் அமைக்கும் 'கே.இ.சி., இன்டர்நேஷனல்' நிறுவனம், பவர் கிரிட் நிறுவனத்திடம் இருந்து 2,872 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆர்டர்களை பெற்றுள்ளது. குஜராத்தில் 8.5 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க

மின்சாரத்தை கொண்டு செல்லும் வகையில் 765 கிலோ வோல்ட் மின்

வினியோக பாதை அமைக்கும் பணிக்காக இந்த ஆர்டர் கிடைத்துள்ளது.

'ட்ரூ குட்' நிறுவனத்துக்கு ஹைதராபாதில் புதிய ஆலை

சிறுதானிய நொறுக்குத்தீனி தயாரிப்பு நிறுவனமான 'ட்ரூ குட்' தனது ஏழாவது உற்பத்தி ஆலையை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் அமைத்துள்ளது. இதன் வாயிலாக, மாதம் 70 லட்சம் 'சிக்கி' மற்றும் சத்து பார்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். அவ்வகையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் மாதத்துக்கு 5 கோடியாக உயரும். மேலும், ஹைதராபாதில் அமையவுள்ள 'ஆல்பா' ஆலைக்காக இந்நிறுவனம் 40 கோடி ரூபாய் கூடுதல் முதலீடு செய்கிறது.

ஆப்பிள்' நிறுவன வருவாய் இந்தியாவில் 32% உயர்வு

'ஆப்பிள்' நிறுவனத்தின் இந்திய வருவாய், 2025-26 நிதியாண்டில் 32 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து 1.04 லட்சம் கோடி ரூபாயானது. சந்தை ஆய்வு நிறுவனமான 'டாப்லர்' வெளியிட்டுள்ள அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் இது 79 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல், கடந்த நிதியாண்டில் ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 66 சதவீதம் உயர்ந்து 5,311 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement