தத்கலில் மின் இணைப்பு உடனே வழங்க கோரிக்கை

நாமக்கல்:பொரசபாளையத்தில், 'தத்கல்' மின் இணைப்பு பெறுவது தொடர்பான, விவசாயிகள் ஆலோசனை கூட்டம், நடந்தது.

டாக்டர் ஸ்ரீநித்திய சர்வானந்தா தலைமை வகித்தார். விவசாய முன்னேற்ற கழக, மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஓராண்டுக்கு மேலாக, 'தத்கல்' திட்டத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து, 2,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீண்ட நாட்களாக காத்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக, தமிழக மின்வாரியம் மின் இணைப்பு வழங்க வேண்டும்.

புதிதாக பொறுப்பேற்ற, த.வெ.க., அரசு, சட்டசபையில், 'தத்கல்' முறையில் மின் இணைப்பு வழங்கப்படும் என, அறிவித்தாலும், மின்வாரியத்திற்கு உரிய அரசாணை இதுவரை சென்று சேரவில்லை என, அதிகாரி கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடம் நீடித்து வருகிறது.

எனவே, அரசு விரைந்து செயல்பட்டு பணத்தை கட்டியவர்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement