காரில் குட்கா கடத்தல் 3 பேருக்கு 'காப்பு'
ஓசூர்: தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த மகேந்திரா சைலோ காரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலம், பெங்களூரு கே.ஆர்.,புரா மார்க்கெட்டிலிருந்து, புகையிலை பொருட்களை வாங்கி கொண்டு, கோவை மாவட்டத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது.இதனால், காரில் வந்த ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பள்ளி அருகே மொடச்சூர் வினாத் கார்டன் பகுதியில் வசிக்கும் அஜய்குமார் தாஸ், 44, அதே பகுதியில் வசிக்கும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புதியமுர்மு, 21, மொடச்சூர் இந்திரா நகரை சேர்ந்த கார் டிரைவர் குமணன், 34, ஆகிய, 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 15 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.