அள்ள அள்ள குறையாத பிளாஸ்டிக் கழிவுகள்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் செல்லும் சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை துாய்மை பணியாளர்கள், கடந்த ஓரிரு நாட்களாக அகற்றி வருகின்றனர்.

இதில், பெரும்பாலான சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குவியல், குவியலாக அகற்றினர்.பெருமளவு பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடை கால்வாயில் தேங்கி, கழிவுநீர் செல்ல முடியாமலும், மழைநீர் சீராக செல்ல முடியாமலும், ரோட்டில் செல்ல இந்த பிளாஸ்டிக் கழிவுகள் தான் காரணம். இதனால் துாய்மை பணியாளர்கள் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கழிவுகளை சாக்கடை கால்வாயில் போடுவதால் தான், அடைப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து எவ்வளவு துாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொறுப்பற்ற முறையில் பலர் செயல்படுவோர், கழிவுநீர் கால்வாய்களில் குப்பையை கொட்டுகின்றனர்.
எனவே, சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில், கழிவுகளை போடுபவர்களை கண்டறிந்து, பள்ளிப்பாளையம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement