கார்கள் மோதி விபத்து தம்பதி உயிரிழப்பு
துாத்துக்குடி: கார்கள் மோதிய விபத்தில், ஜீவானந்தம், 63, அவரது மனைவி சண்முகலட்சுமி, 59, உயிரிழந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கசவன்குன்று கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மனைவி சண்முகலட்சுமி. இருவரும், சங்கரன்கோவிலில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காரில் இன்று (அக்.,25) வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது மகன் சித்துராஜ், 27, காரை ஓட்டினார்.
கழுகுமலை அருகே கல்லுாரணி பகுதியில், சென்று கொண்டிருந்த கார் மீது, எதிர் திசையில் வந்த மற்றொரு கார், நேருக்கு நேர் மோதியது. இதில் ஜீவானந்தம், சண்முகலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சித்துராஜ், மற்றொரு காரின் டிரைவரான நாலாட்டின்புதுாரைச் சேர்ந்த கரண், 27, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
நாலாட்டின்புதுார் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இறப்பு விபர மருத்துவ சான்றிதழ்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க கோரிக்கை
-
நத்தம் ரோட்டில் அதிகரிக்கும் டூவீலர் விபத்து உயிரிழப்புக்கள்: எஸ்.பி., நடவடிக்கை அவசியம்
-
திருவொற்றியூர் வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகள் இழுபறி மூன்று ஆண்டுகளாக சிரமப்பட்டு வரும் பயனாளிகள்
-
இடிந்து விழும் அபாயத்தில் வன அலுவலகம்: ஊழியர்கள் அச்சம்: புதுப்பிக்க நிதியில்லை
-
விலைவாசி உயர்வு அ.திமு.க., குற்றச்சாட்டு
-
ரூ.2 கோடி தங்கப்பசை ஏர்போர்ட்டில் பறிமுதல்
Advertisement
Advertisement