மது போதையில் தகராறு டிரைவர் அடித்து கொலை
துாத்துக்குடி: மது போதையில் தகராறு செய்த லாரி டிரைவர் தனுஷ்கோடி, 36, ஊர் மக்களால் அடித்து கொல்லப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், ஏரல், திருவெழுதிநாடார்விளையை சேர்ந்தவர் தனுஷ்கோடி; லாரி டிரைவர். இவர், மது குடித்துவிட்டு, அப்பகுதியில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அக்., 23ல் அவ்வழியாக சென்ற கணேசபுரத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம், தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில், கணேசபுரத்தைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில், தனுஷ்கோடி உயிரிழந்தார். ஏரல் போலீசார், கணேசபுரத்தைச் சேர்ந்த சுடலைமணி, 35, சாமுத்துரை, 32, அஜித், 24, உட்பட, 10 பேர் மீது மீது வழக்கு பதிந்தனர்.
இதற்கிடையே, கொலையாளிகளை கைது செய்யக்கோரி, தனுஷ்கோடியின் உறவினர்கள் துாத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனுஷ்கோடியின் மனைவி பிரம்மசக்தி கூறுகையில், ''தனுஷ்கோடியை தாக்கியவர்களில் சிலர், த.வெ.க.,வில் இருப்பதால், போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., சரவணன் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார். நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்,'' என்றார்.
மேலும்
-
பா.ஜ.,வின் சி பிளானில் ஒரு நடிகர்: சொல்கிறார் காங்., மாணிக்கம் தாகூர்
-
சரஸ்வதி தேவியின் ஆசியில் சாதனை படைத்த ஸ்வரஸ்ரீ
-
மதியம் முதல் தொடர்ந்து தட்டியெடுத்த மழை வெள்ளக்காடாக மாறிய தார் சாலைகள்
-
நல்ல காலம் பிறக்குது! குண்டும் குழியுமான சாலைகளுக்கு ரூ.75 கோடியில் சீரமைக்க திட்டம்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்