அம்மி கல்லை தலையில் போட்டு அண்ணன் கொலை: தம்பி கைது
திருப்பூர்: திருப்பூரில், முத்து, 26, என்பவர் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த அவரது தம்பி சின்னராம், 21, கைது செய்யப்பட்டார்.
மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்தவர் சின்னராம். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவு முறையிலான அண்ணன் முத்து. இருவரும், திருப்பூர் வளையங்காடு பகுதியில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்தனர்.
சின்னராமுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. இதற்கு, முத்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் துாங்கி கொண்டிருந்த முத்துவின் தலையில், அம்மி கல்லை போட்டு, சின்னராம் கொலை செய்தார்.
அதன்பின் அங்கிருந்து கிளம்பிய சின்னராம், உசிலம்பட்டி போலீசில் சரணடைந்தார். உசிலம்பட்டி போலீசார் தகவல்படி, 15 வேலம்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று முத்து சடலத்தை மீட்டு, சின்னராமை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், ‘சின்னராம், முத்துவுக்கு இடையே, சில ஆண்டுகளாக ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்துள்ளது. சின்னராம் திருமணம் செய்து கொள்வதை முத்து விரும்பவில்லை.
‘திருமணம் செய்யும் முடிவை கைவிடாவிட்டால், இருவரும் ஒன்றாக இருந்த ‘வீடியோ’வை வெளியிடுவேன்’ என, முத்து மிரட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சின்னராம், முத்து தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்துள்ளார்,’’ என்றனர்.
மேலும்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்
-
வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்த எதிர்பார்ப்பு : விவசாய பணிக்கு உதவ விவசாயிகள் வேண்டுகோள்
-
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்தடையால் பயணிகள் அவதி: தனி 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க வலியுறுத்தல்
-
'உணவு சந்ததை'யில் சாம்பார், குருமாவுக்கு 'மவுசு' இட்லி, சப்பா த்தியைவிட 'சை டிஷ்' விலை அதிகம்
-
சூதாடிய 8 பேர் கைது