தீபாவளி இனிப்பு, காரம் தயாரிக்க உரிமம் கட்டாயம்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி பேக்கரி, திருமண மண்டபங்களில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கு உரிமம்கட்டாயம் பெற வேண்டும் என, பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''சுத்தமான இடத்தில் மட்டுமே இனிப்பு, கார வகைகள் தயாரிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் வகைகளை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. இனிப்பு, கார வகைகள் தயாரிக்க, கட்டாயம், உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெற வேண்டும். செயற்கை நிறமுட்டி பயன்படுத்த கூடாது. பள்ளிப்பாளையம் பகுதியில் விரைவில் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement