மூச்சு திணறல் ஏற்பட்டு வடமாநில தொழிலாளி பலி

பள்ளிப்பாளையம்:மத்தியபிரேசத்தை சேர்ந்தவர் ராகேஷ்குமார் பைகா, 20; இவர், பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில், இரண்டு மாதமாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது, ராகேஷ்குமார் பைகாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ராகேஷ்குமார் பைகா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement