கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர், மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதேபோல், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை தலைவர் விடுதலைசெல்வி தலைமை வகித்தார். இணை செயலாளர் சிவக்குமார் கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு நிறுவனங்களை அழிக்கும் நோக்கில் புதுப்புது திட்டங்களை, எந்தவித திட்டமிடலும், முன்னேற்பாடுமின்றி செயல்படுத்தி, அதனால் ஏற்படும் தவறுகளுக்கு ஊழியர்களை பலிகடா ஆக்குவதை தடுக்க வேண்டும்.
முழுமையான புரிதல் இல்லாமல் கால அவகாசமின்றி அவசரமாக பணிகளை மேற்கொள்வது. பின்னர் அதே பணியை வேறு மாதிரி கேட்பது என, தொடர் பணிச்சூழலை ஏற்படுத்தி ஊழியர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Advertisement