நாமக்கல் மாநகராட்சியில் இன்று குடிநீர் சப்ளை 'கட்'

நாமக்கல்:நாமக்கல் மாநகராட்சி கமிஷனர்

செல்வபாலாஜி வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாநகராட்சி பகுதிக்கு, ஜேடர்பாளையம் குடிநீர் திட்டம் மூலம் தினசரி, 18 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி.,) குடிநீர் பெறப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக, கபிலக்குறிச்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின் இணைப்பில் ஏற்பட்ட உயர் மின்னழுத்தத்தால், இரண்டு மின்மோட்டார்களும் பழுதடைந்துள்ளன. இதனால், தற்போது ஒரு மின்மோட்டார் மட்டுமே இயங்கி வருகிறது. தினசரி, 8 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும், மோட்டார் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்று மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement