இளம் பெண் மர்ம சாவு

நாமக்கல்:எருமப்பட்டி அடுத்த திப்ரமாதேவியை சேர்ந்தவர் சுரேஷ், 29; கூலித்தொழிலாளி. இவருக்கும், திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்த முருகேசன் மகள் கோகிலா, 30, என்பவருக்கும், கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின், சுரேஷ், கோகிலா தம்பதியினர் திப்ரமாதேவி பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் சுரேஷ் மற்றும் கோகிலா ஆகிய இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை, கோகிலா தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதிர்ச்சியடைந்த தந்தை முருகேசன் மற்றும் உறவினர்கள், கோகிலாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். புகார்படி, எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement