ஜல்லி கடத்திய 2 லாரிகள் பறிமுதல்; இருவர் கைது
ஓசூர்: ஓசூர் பேகேப்பள்ளி வி.ஏ.ஓ., ஆனந்தன் மற்றும் வருவாய்த்துறையினர், தமிழக எல்லையில் உள்ள பல்லுார் சந்திப்பு சாலையில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இரு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, தமிழக அரசின் தடையை மீறி, சூளகிரி அருகே சப்படி கிராமத்திலிருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு ஒரு லாரியில், 7 யூனிட்டும், மற்றொரு லாரியில், 5 யூனிட்டும் ஜல்லியை கடத்தி செல்வது தெரிந்தது.இரு லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிப்காட் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., ஆனந்தன் புகார் படி, லாரி டிரைவர்களான, ஊத்தங்கரை அருகே கோனக்குட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 35, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த இண்டூர் மாரியம்பட்டியை சேர்ந்த சின்னசாமி, 36, ஆகிய, 2 பேரை போலீசார் கைது செய்தனர். லாரி உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரூர் அருகே அக்ரஹாரத்தில் தார்ச்சாலை சேதத்தால் அவதி
-
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் கட்டளை கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
-
வெற்றி பயணம் திட்டத்தால் உள்ளூர் வணிகம் பாதிக்கப்படுமே?: அந்துமணி பதில்கள்!
-
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
-
பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு
-
படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்
Advertisement
Advertisement