தவெக ஆட்சி 6 மாதங்களை பூர்த்தி செய்யாது; நம்புகிறார் ஸ்டாலின்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் இன்றைக்கு தவெகவிற்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலைதான் இருக்கிறது. விலைவாசி உயர்வு ஒருபுறம், நிர்வாக சீர்கேடு மறுபுறம், இவைத்தவிர பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என்ற செய்திகள் இல்லாத நாட்களே இல்லை.
குழந்தைகள் மாயமாகி வருகின்றனர். தவெக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படையைக் காப்பாற்றவே, மற்றொரு படையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையா? இல்லை போதை நடமாட்டமா? என்பதாகத் தான் இன்றைய தவெக ஆட்சி நடந்து வருகிறது. மேடைக்கு, மேடை அவர் என்ன கத்துகிறார் என்றால், தீய சக்தி, தீய சக்தி என்று புலம்பி கொண்டு இருக்கிறார்.
தீயசக்தி யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறது. நான் உங்களை எல்லாம் அன்போது கேட்டு கொள்ள விரும்புவது, கேகேஎஸ்ஆர் பேசும் போது சொன்னார். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, இன்றைக்கு நாட்டை ஆட்சி செய்யும் அநியாய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும். நான் துவக்கத்தில் சொன்னேன். 6 மாதம் என்றேன். ஆனால் 6 மாதம் கூட நிலைக்க முடியாத நிலையில் தான் இந்த ஆட்சி போய் கொண்டு இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னையில் திருமண விழாவில் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு உரையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இவர் முதலில் தன்னுடைய 74 வயதை பூர்த்தி செய்யட்டும்...
உங்களின் கட்சி எதிர்வரும் தேர்தல் வரை கூட இருக்காது அதற்குள் அழிந்து விடும் என்று நம்புகிறோம் சரிதானே.
மறுபடியும் குடும்ப ஊழல் ஆட்சி தொடரவா
முன்னாள் நிரந்தர முதல்வர் நிரந்தர புலம்பலை நிறுத்தாமல் இருந்து நிரந்தரமாக மனம் பேதலித்து போய் விடுவாரோ என்று மிகவும் பயமாகவும் கவலையாகவும் இருக்கிறது. எனவே ஒரு ஆறுதலுக்காக அண்டார்டிகா ஆர்டிகா கண்டங்களுக்கு நிரந்தர முதல்வர் அல்லது ஜனாதிபதி என்று ஒரு நியமனப் பதவி உருவாக்கி நிரந்தரமாக கொடுத்து விட்டால் நிம்மதியாக இருப்பார். நாமும் சற்று நிம்மதியாக இருக்கலாம்!
பாவம் திமுக, தனக்கு கிடைத்த ஐந்தாண்டு கால ஆட்சி வாய்ப்பை, பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் கமிஷன் பணத்தை வாரி குவிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தியது. 4000 கோடி செலவு செய்தும், எந்த ஒரு இடத்திலும் மழை நீர் தேங்காமல் தலைநகர் சென்னையை காப்பாற்ற இயலவில்லை என்பது மிகப் பெரும் சோகம் இந்நிலையில், இனிமேல் திமுக தமிழக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வாய்ப்பு கிடைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
பாவம் தூக்கத்திலும் விஜய் என்ற வெற்றி பெயரை சொல்ல வைத்து விட்டது த வெ க. காலத்தின் கோலம்.
இன்னும் ஆறுமாதம் திமுக கட்சி இருக்குமா ?
ஆறுமாதத்திலாவது தொலைந்தால் நன்றாக இருக்கும். அப்பாவின் முக்த்தையும் அவரது அறிக்கைகளையும் கண்டால் வெறுப்பாயிருக்கிறது. தவெகவுக்கு மக்கள்5 வருடம் கொடுத்து இருக்கிறார்கள். உங்கள் பேராசையுனால் ஆட்சி கவிழ்ப்பு என்ற நாடகத்தை நடத்தினால் பர்மெனென்ட்டாக காணாமல் போவீரகள் அப்பா.
தமிழகம் நாறியது போதாதா. இன்னுமா உன் சோதனை,
ஐயா வயது ஆகிவிட்டது ஓய்வு எடுங்கள் வ உங்க ஆட்சியல என்னவோ பாலும் தேனும் ஓடின மாதிரி ம போயிடும்
ஊடகங்களும் தூண்டி விட்டு ரசிகின்றன.மேலும்
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
-
இஸ்ரேல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு; அதிபர் நெதன்யாகுவுக்கு பின்னடைவு
-
12,000 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம்! தொடர் கண்காணிப்பில் மாவட்ட அதிகாரிகள்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'