அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் மூலம் 3,051 பஸ்கள் இயக்கம்

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் மூலம் 3,051 பஸ்கள் முழுமையாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் அலுவலக செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் 6 மண்டலங்களில் உள்ள 5 சதவீதம் பஸ்களான 136 பஸ் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, ஒரு சில சமூக ஊடங்களில் வெளியாகியுள்ளது. கடந்த 16ம் தேதி வெளியாகிய இந்த தகவல் சமூக ஊடகங்களில் தற்போது மீண்டும் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்த பஸ் சேவைகள் கடந்த 20 ம் தேதியில் இருந்து விழுப்புரம் கோட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 3,051 பஸ்களும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான வெற்றி பயணம் துவங்கிய கடந்த 2ம் தேதி முதல் மக்களின் வசதிக்கு எந்தவித பாதிப்பின்றி இயக்கத்திறனை மேம்பபடுத்தி மக்களின் சேவையை முதன்மை நோக்கமாக கொண்டு அனைத்து பகுதிகளுக்கு உரிய பஸ் சேவைகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement