மறியலில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி மஞ்சு. இவர்களின் மகன் தமிழரசன், 18; இவர். தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் இறப்பிற்கு, அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் முறையான விசாரணை செய்யக்கோரி, மஞ்சு, கனகராஜ் மற்றும் உறவினர்கள் கடலுார் மாவட்டம், துாக்கனாம்பாக்கம் மணிகண்டன், அதனுார் சபரி உட்பட 15 பேர் நேற்று விழுப்புரம் சிக்னல் அருகே மறியல் செய்தனர்.

மறியல் மூலம் வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக இவர்கள் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.

Advertisement