அரசு பஸ் மோதி வாலிபர் பலி: பிறந்த நாளன்று சோகம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பிறந்த நாளில் அரசு பஸ் மோதி வாலிபர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் சின்னதுரை, 21; கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. வெளிநாட்டில் பணிபுரிந்த இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார்.
இன்று (அக்.,26) இரவு 8:00 மணியளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
கோட்டைமேடு ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, அதே திசையில் திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசு பஸ் சின்னதுரை ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில், சின்னதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இறந்த சின்னதுரைக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடதக்கது. பிறந்த தினத்தன்றே சின்னதுரை இறந்தது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை