அனைத்து முடிவுகளும் ஒரு மனதாக எடுக்கப்பட்டவை :எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதில்
புதுடில்லி:எஸ்.ஐ.ஆர்., பணி தொடர்பாக மற்ற இரு தேர்தல் கமிஷனர்களின் ஒப்புதல் பெறாமல், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக புகார் எழுந்தது. கடந்த 10 மாதங்களில் தேர்தல் கமிஷன் எடுத்த முடிவுகள் மற்றும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் தொடர்பான உத்தரவுகள் குறித்து, மற்ற தேர்தல் கமிஷனர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி இருவரும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக, நாளிதழில் வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்கொடி உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், பீஹாரின் பாட்னாவை சேர்ந்த ராகேஷ் குமார் சிங் மற்றும் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி சார்பில், ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், வழக்கு முடியும் வரை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் தே ர்தல் கமிஷன், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தன.
இந்நிலையில், இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டதாவது :எஸ்ஐஆர் நடவடிக்கை தொடர்பாக 2025 ஜூன், அக்டோபர், மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் ஒரு மனதாக எடுக்கப்பட்டவை.தேர்தல் கமிஷனின் குறிப்பிட்ட பிரிவு அனுப்பும் கோப்புகள் முதலில் ஒரு தேர்தல் கமிஷனருக்கும், பிறகு மற்றொரு தேர்தல் கமிஷனருக்கும் இறுதியாக தலைமை தேர்தல் கமிஷனருக்கும் அனுப்பப்படும். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட முடிவுகள், தேர்தல் கமிஷனின் சம்பந்தப்பட்ட கோப்புகளில் முறையாக பதிவு செய்து, தேர்தல் கமிஷனர்கள் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனரின் கையெழுத்தை கொண்டு இருக்கும். அதன் பிறகு அந்த முடிவு தேர்தல் கமிஷன் செயலகத்தால் அறிவிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும்.
முடிவெடுக்கும் செயல்முறையில், தலைமை தேர்தல் கமிஷனர் , மற்ற தேர்தல் கமிஷனர்களுக்கும், அல்லது தேர்தல் கமிஷனர்கள், தலைமை தேர்தல் கமிஷனுருக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் பரிந்துரை, கருத்து ஆகியவை 2023ம் ஆண்டு சட்டத்தின்படி தேர்தல் கமிஷனின் முடிவாக கருதப்படாது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும், நாளிதழ் செய்தியை அடிப்படையாக கொண்டவை. அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். பார்ம் 6 குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த தேர்தல் கமிஷன், அந்த படிவத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
THAT IS WNY MODI IS CALLED VISHWA GURU. HE HAD FOLLOWED CHANAKYA NEETHI IN THIS THING. THE WHOLE NEWS CIRCULATION ON THREE ARE NOT IN AGREEMENT BY BJP ONLY. BECAUSE RAHUL KHAN IS TRYING TO DO VOTE CHOR FOR A LONGER TIME MUCH BEFORE THE DISAGREEMENT NEWS. THEY WANTED TO TRAP RAUL KHAN AND THE ENTIRE OPPN I MEAN PUTTING THEM IN BIGGER TRAP SO THAT LS ELECTIONS BJP WILL HAVE A CLEAN SWEEP.
3 கமிஷனர்களும் ஒப்பிட்டால்தான் - எந்த ஒரு முடிவும் அங்கீகாரம் பெறமுடியும்.
இதுவே அறியாத ஒரு நபர் - எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?
ஜனநாயகத்தின் எதிரிகளுக்கு இந்த செய்தி பேரிடியாக இறங்கும் ....
தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்பு உச்ச நீதிமன்றம் படியேறி பதில் தாக்கல் செய்தது அரசியல் சாசன முரண்.
அப்பாவி போல் உள்ள அனைத்து போலி வாக்காளர்கள், உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும். ஓகே.
உண்மை கண்டறியும் சோதனை செய்யணும். இல்லேன்னா ரிடையர் ஆனதும் உண்மையை சொல்லுவாங்க
அப்பாவியாக தண்ட சோறு என்று எங்களுக்கு தெரியும்
பைல்கள் பொய் சொல்லாது .ஆனால் பதவி வெறிபிடித்து அலையும் கும்பல்களுக்கு இது கஷ்டமான செய்தியாகத்தான் இருக்கும்
தவறான செய்திகளை வழங்கி கலவரம் ஏற்பட காரணமாக இருந்த தேச விரோத ஊடகம் தடை செய்யப் பட வேண்டும்.
உள் நாட்டு தீவிரவாதிகள் மீது என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். இனி ஒருத்தனும் இவ்விதம் செய்ய கனவிலும் நினைத்துப் பார்க்க கூடாது. முதலில் அவர்களின் குடும்பங்கள் தகர்க்க பட வேண்டும்
தேர்தல் கமிஷனுக்கு எதிரான அவதூறுகளுக்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
So yet another failure and blow to Rajiv, Congress and its allies. But these people will never owe their mistakes and repend.
பொய் செய்திகளை பரப்பி காங்கிரஸ் பூச்சிகளை வைத்து கலவரத்தை ஏற்படுத்தினால் - மோடியே ஓடிவிடுவார், அதன் பின் ஆட்சி மாற்றம் வரும் என்ற கனவில் வின்சியின் எஜமானர்கள் மிதந்திருந்தார்கள்..மேலும்
-
முதல்வரை விமர்சித்த புகாரில் தேடப்பட்ட வேலுார் தி.மு.க., கவுன்சிலர் விழுப்புரத்தில் கைது
-
வேளாண் கல்லுாரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
-
சரண்டரான நக்சல் முக்கிய தலைவனுக்கு சிறையில் திருமணம்; போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து
-
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
-
15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்
-
விளையாட்டில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு