ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கால்நடைகள் வெளியேற்றம்
திட்டக்குடி: வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் கிடைமடக்கிய மாடுகளை, தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சேலம், ஆத்துார், தலைவாசல் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ‘சுவேத நதி’ என்று அழைக்கப்படும் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், தொழுதுார் அணைக்கட்டுக்கு, 30 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதே அளவு தண்ணீரை நீர்வளத்துறையினர் வெள்ளாற்றில் திறந்துவிட்டனர். இதனால் கரையோர கிராமங்களுக்கு வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், திட்டக்குடி, மணல்மேடு பகுதி வெள்ளாற்றில் வெளி மாவட்டத்தில் இருந்து மேய்ச்சலுக்கு வந்த 100க்கும் மேற்பட்ட கால்நடைகளை கிடைமடக்கி வைத்திருந்தனர். 10க்கும் மேற்பட்டோர் பராமரித்து வந்தனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக மாடுகள் மற்றும் கிடைமடக்கியவர்களை, திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் ஆற்றில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 2 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை