இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படும் பூஞ்சைகள்: பல்கலை மாநாட்டில் தகவல்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை உயிரியல் அறிவியல் புலம் சார்பில் பூஞ்சைகளின் பன்முகத் தன்மை குறித்த தேசிய மாநாடு, இந்திய மைக்காலஜி சங்க 53ம் ஆண்டு கூட்டம் நடந்தது.

புலத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். பதிவாளர் (பொறுப்பு) முத்தையா துவக்கி வைத்தார். மாநாடு ஒருங்கிணைப்பு செயலர் சண்முகையா பேசுகையில், டிரைக்கோடெர்மா போன்ற பூஞ்சைகள் இயற்கையான உயிரியல் பூச்சிக்கொல்லிகளாக செயல்பட்டு, பயிர்களை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. இது, செயற்கை வேதியியல் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது என்றார்.

பஞ்சாப் பல்கலை பேராசிரியர் சுதாகர ரெட்டி, மைக்காலஜி சங்க தலைவர் ரூபம் கபூர், சென்னை பல்கலை தாவரவியல் மேம்பாட்டு ஆய்வு மைய முன்னாள் இயக்குநர்கள் ராமன், மதிவாணன், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் செல்வராஜன் பேசினர்.

ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர், இளம் விஞ்ஞானி விருதுகள் வழங்கப்பட்டன. இணை பேராசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

Advertisement