கருமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அருகே, வைப்பூர் கருமாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று (அக்.,25) விமரிசையாக நடைபெற்றது.

குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் கிராமத்தில் உள்ள கருமாரியம்மன் கோவில், 2014ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, ஆகம விதியின் படி, கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி, கோவில் கோபுரம் புனரமைத்தல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளபடபட்டன. இதையடுத்து, 23ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது.

அன்று காலை, 7:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிர, மகாலட்சுமி ஹோமங்கள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை நடந்தது.

கும்பாபிஷேக நாளான இன்று, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடந்தன. காலை 9:00 மணிக்கு கருமாரியம்மன் கோவில் விமான கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement