மண்ணிவாக்கம் – கூடுவாஞ்சேரிக்கு மினி பஸ் இயக்க பயணியர் கோரிக்கை
வண்டலூர்: மண்ணிவாக்கம் – கூடுவாஞ்சேரி இடையே ஓட்டேரி வழியாக வழியாக, மினி பஸ் இயக்க வே ண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலுார் ஊராட்சியில், உள்ள 15 வார்டுகளில் 40,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஓட்டேரி மற்றும் புதிய ஓட்டேரி விரிவு பகுதியானது வண்டலுார், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மைய பகுதியாக உள்ளது.
இப்பகுதியில் வசிப்போர் தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் பேருந்தில் பயணிக்க, ஒரு கி.மீ., துாரம் நடந்து சென்று
ஜி.எஸ்.டி., சாலை பேருந்து நிறுத்தத்திற்கு, ரயில் தண்டவாளங்களை கடந்து செல்லும் நிலை உள்ளது.
தண்டவாளங்களை பாதுகாப்புடன் கடக்க, சுரங்க பாதை வசதியும் இல்லாததால், விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் ஷேர் ஆட்டோக்களில் பயணிப்பதால், கூடுதல் செலவும் நேர விரயம் ஏற்படுகிறது.
எனவே, மண்ணிவாக்கத்தில் இருந்து வண்டலூர் ஊராட்சி, ஓட்டேரி, புதிய ஓட்டேரி பகுதி வழியாக கூடுவாஞ்சேரிக்கு மினி பஸ் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'