சிவகாசி சாத்துார் ரோடு விலக்கில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
சிவகாசி: சிவகாசி சாத்துார் ரோடு விலக்கில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்தில் பாதிக்கப்படுவதோடு விபத்திற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
சிவகாசி சாத்துார் ரோடு விலக்கில் பஸ் ஸ்டாண்டு , சாத்துார் ரோடு, பைபாஸ் ரோடு பிரிந்து செல்கின்றது. நகருக்குள் மற்றும் பஸ் ஸ்டாண்டிற்கு வரவேண்டிய பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இதன் வழியாகத்தான் வரவேண்டும். பள்ளி கல்லுாரி பஸ்கள் கனரக வாகனங்கள் இதனை கடந்து தான் செல்ல வேண்டும். சாத்துார் ரோட்டில் ஏராளமான பட்டாசு கடைகள், அச்சகங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் அதிகமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போது தீபாவளி நெருங்கி வரும் வேலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான கார்களில் மக்கள் பட்டாசு வாங்க வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நாளிலிருந்து டிராபிக் சிக்னல்கள் செயல்படவில்லை. இதனால் எப்பொழுதுமே போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. தவிர அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. எனவே இங்கு டிராபிக் சிக்னல்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை