அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினரின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பொருளாளர் ரத்தினம் தொடக்க உரையாற்றினார். செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில தணிக்கையாளர் கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர பென்ஷன் 6,750 ரூபாயை அகவிலைப் படியுடன் சேர்த்து வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். குடும்ப நலநிதி 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement