கடலுக்கு செல்லாததால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பு
பரங்கிப்பேட்டை: மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பரங்கிப்பேட்டை கடற்கரையோர மீனவ கிராமங்களான புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை , கிள்ளை, முழுக்குத்துறை, முடசல் ஓடை உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க படகில் வெள்ளாற்று முகத்துவாரம் வழியாக க சென்று மீன் பிடித்து அன்னங்கோவில் மற்றும் முடசல் ஓடை மீன் பிடி இறங்கு தளங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி தீவிரமடைந்துள்ளதால், மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என கடலுார் மீன் வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதையடுத்து, நேற்று பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர, 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை இறங்கு தளத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்படவில்லை.
மேலும்
-
அசிங்கமா போச்சு குமாரு... பின்தொடர்வோர் 21 லட்சம் பேர்; கிடைத்த ஓட்டு 33 மட்டுமே!
-
கல்பாத்தி கோவிலில் தேரோட்டம் மாயவரம் கோவிலுக்கு அழைப்பு
-
நெற்கதிர் அறுவடை திருவிழா
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை; பால் பொருட்கள் விலை உயர்வு; ஆவின் நிர்வாகம் சொல்வது இதுதான்!
-
ஐநா பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம்; இந்தியா வலியுறுத்தல்
-
இயல்நிலைப்புக்கு திரும்பியது நீலகிரி; சுற்றுலா மையங்கள் திறப்பு