அசிங்கமா போச்சு குமாரு... பின்தொடர்வோர் 21 லட்சம் பேர்; கிடைத்த ஓட்டு 33 மட்டுமே!
-நமது சிறப்பு நிருபர்-
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் பிஷ்னோய் ஜோதிடராகவும், யூடியூபராகவும் மற்றும் இன்ப்ளூயன்சராகவும் மிகவும் பிரபலமானவர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 14 லட்சம், பேஸ்புக்கில் 2.32 லட்சம் மற்றும் யூடியூபில் 5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
அதாவது, மொத்தம் 21 லட்சம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். இணையத்தில் தனக்கிருக்கும் பெரும் செல்வாக்கை மலை போல் நம்பியிருந்த அவருக்கு, நிஜ உலக தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது.
ஜோத்பூர் மாவட்டம் ஓசியன் தாலுகாவில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இவர் போட்டியிட்டார். இந்த கிராமத்தில் மொத்தம் 1,600 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், இவருக்கு வெறும் 33 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன.
வேடிக்கை என்னவென்றால், அந்த 33 ஓட்டுக்களில் 11 ஓட்டுக்கள் அவருடைய குடும்பத்தினர் உடையது. சமூக ஊடகங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போன்ற தலைப்புகளில் பல்வேறு வீடியோக்களை பகிர்ந்துள்ளார். சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் தன்னை ஆதரித்தாலும், சொந்த கிராம மக்களின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டதாகக் கூறி ஓம்பிரகாஷ் பிஷ்னோய் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இணையத்தில் கிடைக்கும் 'லைக்ஸ்' மற்றும் பார்வையாளர்கள் ஒருபோதும் நிஜ உலகில் ஓட்டாக மாறாது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
சமூகவலைதள செல்வாக்கு நம்பி தேர்தலில் களம் காணுவது குறித்து தங்களது கருத்துக்களை கமென்டில் பதிவிடுங்கள் வாசகர்களே!
This is the difference between the reel world and the real world. But out State staunchly supports only reel world, since 1967
தமிழ்நாடு மக்கள் இதற்கு விதிவிலக்கு. ரீல்ஸை பார்த்து மோகம் வந்து விட்டது.
தேர்தலில் கண்டம் என இவர் ஜாதகத்தை பார்க்க இவரே தவறி விட்டார் .ஆனாலும் பாருங்கள் இவர் இந்த தோல்வியை யூ டியூப் ,பேஸ்புக் ,இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து அனுதாபங்களை பெறுவதற்கு தான் முயற்சிப்பார் .
பேஸ்புக்கில் ஆயிரம் பாலோவர்ஸ் இருபாங்க. ஆனா அவங்க சாவுக்கு ஐந்து பேருகூட வரமாட்டாங்க. அதனால தான் என் ஐடியை டெலெட் செய்துவிட்டேன்.
இவர் தமிழகத்தில் களம் கண்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார் வடக்கன்கள் இந்த விஷயத்தில் எப்போதும் தெளிவு உள்ளவர்கள் தான் ஆனால் தமிழகத்தில் youtube க்கு சினிமாக்காரன்களுக்கும் வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் இங்கு உள்ள மக்கள்
ஒருவேளை SIR effect ஆக இருக்குமோ…?
ஏற்கனவே பையனுக்கு அந்த கதி ஆயிடுச்சி தனுசுக்கு ம் அதே அவனுக்கு சப்போட்டா வந்தா மாமனாருக்கு ம் அதுதான்
அந்த SIR நடவடிக்கையில் எனது ஆதரவு வாக்குகளை நீக்கிவிட்டார்கள் என்று கதறாமல் தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு பாராட்ட வேண்டும்.
சொந்த ஊரில் மாடு விலைபோகாது என்பது இதுதானோ?
இந்த நம்பர் இங்கே நம்ம ஊர்ல எங்கேயோ பார்த்தேனே
அப்போ தனுஸ் கத கந்தலா?
ரசிகர்களே போயி வேலய கவனிங்க.மேலும்
-
முதல்வர் வருகை குறித்து முன்னேற்பாடு கூட்டம்
-
மாயாற்றில் வெள்ளம்; வாகனங்கள் செல்ல தடை
-
பார்டர் - ஜரிகையுடன் தயாராகும் அரசின் இலவச வேட்டி - சேலை
-
ஈரோடு ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுதால் பயணிகள் அவதி
-
'கரூரில் இருந்து 40 ஆயிரம் லிட்டர் பால் பல்வேறு நகரங்களுக்கு வினியோகம்'
-
வேளாண் சாகுபடி குறித்து மாணவர்களுக்கு பயிற்சி