நெருங்கும் தீபாவளி பண்டிகை; பால் பொருட்கள் விலை உயர்வு; ஆவின் நிர்வாகம் சொல்வது இதுதான்!

14

-நமது நிருபர்-

தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஆவின் நிர்வாகம் பால் பொருட்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. நாளை (அக் 28) முதல் அமலுக்கு வருகிறது.

ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்து உபபொருட்களாக தயிர், நெய், பட்டர், பிஸ்கட்ஸ், பால்கோவா, குளிர்பானங்கள், முறுக்கு ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவுகள் மற்றும் இதர செலவினங்கள் அதிகரித்துள்ளதை காரணமாக விலை உயர்வை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது விலை உயர்ந்துள்ள பால் உப பொருட்களின் விபரம் பின்வருமாறு:

* 100 கிராம் ஆவின் நெய் பாட்டில் விலை ரூ.10 உயர்ந்து ரூ.95 ஆக அதிகரித்துள்ளது.

* ஒரு லிட்டர் ஆவின் நெய் நெய் ரூ.80 அதிகரித்து ரூ.770 ஆகவும், அரை லிட்டர் நெய் விலை ரூ.30 அதிகரித்து ரூ.390 ஆக உயர்ந்துள்ளது.

* 100 கிராம் ஆவின் வெண்ணெய் விலை ரூ.10 அதிகரித்து ரூ.70 ஆகவும், அரை கிலோ ஆவின் வெண்ணெய் விலை ரூ.45 உயர்ந்து ரூ.320 ஆனது.

* 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.5 அதிகரித்து ரூ.50 ஆகவும், 200 கி.ரசகுல்லா ரூ.90ல் இருந்து ரூ.95 ஆகவும் அதிகரித்துள்ளது.

* கால் கிலோ குலோப்ஜாமுன் விலை ரூ.15 அதிகரித்து ரூ.115 ஆகவும், கால் கிலோ பால்கோவா விலை ரூ.20 உயர்ந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.

* மைசூர்பாக் விலை கால் கிலோ ரூ.20 அதிகரித்து ரூ.160 ஆகவும், 200 மில்லி லிட்டர் ஆவின் லஸ்ஸி விலை ரூ.3 அதிகரித்து ரூ.23 ஆகவும் அதிகரித்துள்ளது.

@block_P@

ஆவின் நிர்வாகம் விளக்கம்!



அதன் அறிக்கை: குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீத்திற்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தரமான பொருட்களைத் தொடர்ந்து வழங்கவும் ஆவின் உறுதிபூண்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மக்கள் அனைவரும் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை தொடர்ந்து வாங்கி, கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்கும் பால் உற்பத்தியாளர்களின் முன்னேற்றத்திற்கும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும். இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.block_P@block_Y@

வெற்றி தீபாவளி பரிசு!



அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களுக்கு வெற்றி தீபாவளி பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு. மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை? வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள்.

இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது. நடிகராக இருக்கும் பொது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி பிளாக் டிக்கெட் ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள். “அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்.

அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை நியமனம் செய்துள்ளீர்கள் முதல்வர் விஜய். மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.block_Y

பிரத்யேக வீடியோ!

67 வகை பால் பொருள் விலை அதிரடி உயர்வு; நெய், தயிர் விர்ர்ர்… மக்கள் அதிர்ச்சி, தலையில் கூடுதல் சுமை!

வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!

Advertisement