கடை மீது விழுந்த வேப்பமரம் அகற்றம்

கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் பகுதியில் கடையின் மீது விழுந்த புளிய மரத்தை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் நேற்று (அக்.,24) இரவு முதல் இன்று (அக்.,25) காலை வரை பரவலாக மழை பெய்தது. இதில், ஏமப்பேர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரமாக இருந்த பழமை வாய்ந்த புளியமரம் இன்று காலை 9:00 மணியளவில் முறிந்து அருகில் கடையின் மேற்கூரை மீது விழுந்தது. அப்போது பொதுமக்கள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டடத்தின் மீது விழுந்த வேப்பமரத்தை இயந்திரத்தால் வெட்டி அகற்றினர்.

Advertisement