பருவமழை காலத்தில் பயிர் பாதிப்பை தவிர்க்க வேளாண் துறை அறிவுரை
விழுப்புரம்: வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பயிர் பாதிப்பினை தவிர்த்து அதிக மகசூல் பெற வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) சுரேஷ் செய்திக்குறிப்பு;
வயல்களில் தேங்கும் உபரி நீர் உடனடியாக வெளியேறும்படி வடிகால் வாய்க்கால்களை துார்வாரி தயார் நிலையில் வைக்க வேண்டும். பலத்த மழை எச்சரிக்கையின்போது மேலுரமிடுதல் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அறுவடை செய்த நெல் மற்றும் இதர தானியங்களை மழையில் நனையாதவாறு தார்பாய்கள் கொண்டு மூடி, பாதுகாப்பான அரசு கொள்முதல் நிலையங்கள் அல்லது கிடங்குகளில் சேமிக்க வேண்டும்.
மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலைச் சுற்றி 30 செ.மீ., ஆழமுள்ள வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும். பருவமழை தீவிரமடைவதற்கு முன்பே நடவு செய்ய வேண்டும். சற்றே முதிர்ந்த நாற்றுகள், இளம் நாற்றுகளை விட வெள்ளத் தாக்குதலை நன்றாக தாங்கும்.
மழை நின்ற பிறகு, நீர் வடிந்தவுடன் எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் இடுவது மழையினால் ஏற்படும் பற்றாக்குறையைப் போக்கும்.
நெல் வயலில் 3 முதல் 5 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி பயிர் மஞ்சள் நிறமாக மாறினால் உடனடியாகப் வெள்ள நீர் வடிந்தவுடன், 1 சதவீதம் யூரியா மற்றும் 1 சதவீதம் பொட்டாஷியம் சல்பேட் கலவையை இலைகளின் மேல் தெளிக்க வேண்டும். 5 அல்லது 6-ம் மாதக் கரும்புகளை தோகைகளை உரித்து, ஒன்றுடன் ஒன்று சேர்த்து விட்டம் கட்ட வேண்டும்.
உளுந்து மற்றும் பச்சைப்பயறு பயிர்கள் தேங்கும் தண்ணீரைத் தாங்கும் திறன் அற்றவை. எனவே, வயலில் தண்ணீர் தேங்கவே கூடாது.
இந்த முன்னேற்பாடு மற்றும் மேலாண்மை பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பயிர் பாதிப்பினை தவிர்த்து அதிக மகசூல் பெற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஜாமியா பல்கலை விவகாரம்: வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 எம்பிக்கள் மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு!
-
மழையால் வடிகால் பாலம் சேதம்
-
நாளை தமிழக சட்டசபை உறுதிமொழிக்குழு வருகை
-
தொடர் மழையால் கோரை அறுவடை முடக்கம்
-
காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
-
ரயில்வே குகை வழிப்பாதையில் கூடுதல் மின்விளக்கு தேவை