விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிப்பது குறித்து ஆய்வு சபாநாயகர் பிரபாகர் தகவல்

விருத்தாசலம்: விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் இன்று (அக்.,25) நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் பிரபாகர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சட்டசபை கூட்டம் நடந்தபோது பல்வேறு எம்.எல்.ஏ.,க்கள் என்.எல்.சி., பிரச்சனை குறித்து பேசி உள்ளனர்.

அதற்கு தொழில்துறை அமைச்சரும் பதில் கூறியுள்ளார். தற்பொழுது எழுந்துள்ள புதிய பிரச்சனையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

தமிழக அரசு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்கும். சிறுமி காணாமல் போன சம்பவத்தில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலையில், பல்வேறு குழுக்களை நியமித்து சிறுமியை தேடும் பணி நடந்து வருகிறது

சிறுமியை கண்டுபிடிக்கும் பணிக்காக முதல்வர் காவல்துறையை முடுக்கி விட்டுள்ளார். மாயமான குழந்தையை போலீசார் விரைவில் கண்டுபிடிப்பர். மழை பாதிப்பு தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது.

தற்போது ஏற்பட்டு இருக்கின்ற அசாதாரணமான சூழ்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டு மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் நிவாரண பணி நடந்து வருகிறது. சென்னையில் கிடப்பில் போடப்பட்ட பணிகள் எல்லாம் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எப்படி செயல்படுத்தி கொண்டிருக்கிறது என்பதை பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெளிவுபடுத்தியுள்ளார்.

தேக்க நிலையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைவில் முடிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் ஆய்வில் இந்த கோரிக்கை உள்ளது. உரிய நேரத்தில் மக்கள் விரும்புகின்ற முடிவினை முதல்வர் எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement