சிவலிங்கம் மீது நாக பாம்பு கடலுார் அருகே பரபரப்பு
கடலுார்: கடலுார் அருகே கோவிலில் சிவலிங்கம் மீது நாக பாம்பு சுற்றியிருந்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார், மேல்பட்டாம்பாக்கம் அடுத்த அகரத்தில் திரிபுர சுந்தரி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, அன்னாபிஷேகத்தையொட்டி இன்று (அக்.,25) மாலை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, மூலவர் சிவலிங்கம் மீது மூன்றடி நீள நாக பாம்பு சுற்றியிருந்ததை கண்டு அர்ச்சகர் அதிர்ச்சியடைந்தார்.
இதனை கண்டு அங்கிருந்த பக்தர்கள் கூச்சலிட்டதால் கோவில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், மூன்றடி நீள நாகபாம்பை லாவகமாக பிடித்துச் சென்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ.,வின் சி பிளானில் ஒரு நடிகர்: சொல்கிறார் காங்., மாணிக்கம் தாகூர்
-
சரஸ்வதி தேவியின் ஆசியில் சாதனை படைத்த ஸ்வரஸ்ரீ
-
மதியம் முதல் தொடர்ந்து தட்டியெடுத்த மழை வெள்ளக்காடாக மாறிய தார் சாலைகள்
-
நல்ல காலம் பிறக்குது! குண்டும் குழியுமான சாலைகளுக்கு ரூ.75 கோடியில் சீரமைக்க திட்டம்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்
Advertisement
Advertisement