சுண்ணாம்பாறு பாலத்தை கவர்னர் திடீர் ஆய்வு

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார்.

வடக்கு கிழக்கு பருவ மழை தீவிரமடைந்தை அடுத்து புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நாளை (27ம் தேதி ) வரை மிக கனமழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கவர்னர் கைலாஷ்நாதன் அரியாங்குப்பம் பாலத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தை ஆய்வு செய்தார். ஆற்றில் வரும் மழைநீரை பார்வையிட்டார்.

பாலத்தின் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்குமாறு நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாலத்தில் தேங்கி நின்ற மழைநீரை தொழிலாளி ஒருவரை அழைத்து அப்புறப்படுத்த செய்தார்.

Advertisement