கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்
புதுச்சேரி: கடலில் பிளாஸ்டிக் பொருள்கள் கலப்பதை தடுக்க வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
புதுச்சேரி கடல் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் அதிக அளவில் கலக்கின்றன. சமீபத்தில் மீனவர்களின் வலைகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சிக்கின. அந்த அளவிற்கு நாம் பிளாஸ்டிக் பயன்பாட்டை அதிகப்படுத்தி இருக்கிறோம். அதை முறையாக குப்பைத் தொட்டிகளிலும் போடுவதில்லை.
சுற்றுலா வருவோரிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்று மீனவர்களுக்கு மீன் கிடைக்கவில்லை. நாளை சூழலே கெட்டு நம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். அரசு இதில் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
கடலுக்குச் செல்லும் வடிகால் வாய்க்கால்களின் இறுதியில் வலைகளைக் கட்டி பிளாஸ்டிக் பொருள்களை தடுத்து நிறுத்த வேண்டும். வட கிழக்குப் பருவ மழையினால் ஏற்படும் பாதிப்புகளை இருந்து மக்களைக் காக்க அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'
-
ஏற்காடு மலை பாதையில் இரு வேறு இடங்களில் விழுந்த மரம், பாறை