சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் வழிபாடு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது.

விருதுநகரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மீனாட்சி சொக்கநாதர் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. பக்தர்கள் பலர் குடும்த்தினருடன் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

* வைத்தியநாத சுவாமி கோயிலில் காலை 7:00 மணிக்கு மேல் வைத்தியநாதர், சிவகாமி அம்பாளுக்கு கும்பம் வைத்து ஹோமம் வளர்த்து சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின் காலை 11:00 மணிக்கு 100 கிலோ அரிசியில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, சிவசகஸ்வர நாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.

* ராஜபாளையத்தில் மாயூர நாத சுவாமி கோயில், சொக்கர் கோயில், அருணாச்சலேஸ்வரர் கோயில், பர்வத வர்த்தினி அம்மன் கோயில், கருப்பஞானியார், பொன்னப்ப ஞானியார் கோயில், குருசாமி கோயில், திருச்சிற்றம்பல குருநாதர் கோயில், பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயில், சத்திரப்பட்டி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர், தேவதானம் நச்சாடை தவிர்த்து அருளிய நாதர் உள்ளிட்ட கோயில்களில் விழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Advertisement