கொட்டும் மழையில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

பெ.நா.பாளையம்: ஆர்.எஸ்.எஸ்., சார்பில், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

இங்குள்ள சூர்யா நகரில் துவங்கிய அணி வகுப்பு ஊர்வலம், கோவை சாலை, மாரியம்மன் கோவில் வீதி, சீனிவாசா நகர், புதுப்பாளையம் ரோடு, மேட்டுப்பாளையம் சாலை வழியாக மீண்டும் சூர்யா நகரை வந்தடைந்தது. சூர்யா நகரில் நடந்த கூட்டத்துக்கு, பெரியநாயக்கன்பாளையம் ஆர்.எஸ்.எஸ்., ஒன்றிய செயலாளர் ராஜகோபால், உறுப்பினர் வசந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை கோட்ட செயலாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement