ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிேஷக விழா

உடுமலை: ஐப்பசி பவுர்ணமியையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள சிவாலயங்களில் நடந்த அன்னாபிேஷக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஐப்பசி மாத பவுர்ணமியில், சிவாலயங்களில் அன்னாபிேஷக விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, மூலவர் திருமேனிக்கு, அன்னத்தால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

பல்வேறு நைவேத்தியங்களும், 11 வகையான சாதங்களும் படைத்து தீபராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

நேற்று உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், காசி விஸ்நாதர் சுவாமிக்கு அன்னாபிேஷகம் செய்யப்பட்டது.

இதே போல், சோமவாரப்பட்டியிலுள்ள பழமை வாய்ந்த அமரபுயங்கீஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் அன்னாபிேஷக விழா நடந்தது.

Advertisement