பா.ம.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் பா.ம.க., புவனகிரி மத்திய ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா நடந்தது. கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுகா, வடதலைக்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், அமுதா தம்பதியரின் மகன் பிரகாஷ்; குறிஞ்சிப்பாடி தாலுகா,வடலுார், ஆபத்தானபுரத்தை சேர்ந்த ஆறுமுகம், காந்திமதி தம்பதியரின் மகள் தீபலெட்சுமி; ஆகிய இருவருக்கும், சேத்தியாத்தோப்பு, ஜெகன் திருமண மகாலில் திருமணம் நடந்தது.

ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., வைத்தியலிங்கம், விக்கிவாண்டி எம்.எல்.ஏ., சிவக்குமார்,புவனகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், பா.ம.க., கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பழ தாமரைக்கண்ணன், மாநில நிர்வாகிகள் தர்மா, அசோக்குமார், ஜெகன், மருத்துவரணி செயலாளர் அன்புசோழன், தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாவட்ட சேர்மன் சிலம்புசெல்வி, மாநில மாணவரணி செயலாளர் விஷ்ணு, நகரசெயலாளர் கலைமணி, ஒன்றிய செயலாளர்கள் சரண்ராஜ், அரிபுத்திரன், வைத்தி மருகானந்தம், செல்வக்குமார், ஜெயசீலன் , அருளாளன் மாற்று கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

விழாவில், பா.ம.க., மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிரணி, சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பா.ம.க., புவனகிரி மத்திய ஒன்றிய செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Advertisement