ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க அணிவகுப்பு ஊர்வலம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் விஜயதசமி விழா அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம் ரயில் நிலையம் அருகிலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு, வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி தாளாளர் சோழன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்., தென்பாரத தலைவர் வன்னியராஜன் ஊர்வலத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
ஊர்வலம், நேருஜி சாலை, திருச்சி நெடுஞ்சாலை வழியாக தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி வரை சென்றடைந்தது.
ஊர்வலத்தில் பங்கேற்ற 350க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், சமுதாய நல்லிணக்கம், குடும்ப அமைப்பு முறையை பாதுகாத்தல். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி, குடிமக்கள் கடமை ஆகியவற்றை வலியுறுத்திச் சென்றனர்.
ஆர்.எஸ்.எஸ்., புதுச்சேரி கோட்ட இணைத் தலைவர் ராஜ் நந்தகுமார், மாவட்ட தலைவர் புதுராஜா, லயன்ஸ் நிர்வாகிகள் கோபி, குமார், ராஜேந்திரன், டாக்டர் பார்கவா உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மேலும்
-
இலவச வீட்டு மனைப்பட்டா சப் கலெக்டரிடம் மனு
-
வெலிங்டனில் தண்ணீர் திறப்பு நீர்வளத்துறையினர் ஆய்வு
-
திருக்கோவிலுார் அணைக்கட்டு புனரமைப்பு பணி நிறைவடைந்தது: வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
-
பூசாரி கண் தானம்
-
மண் அரிப்பால் சேதமடைந்த சாலைகள்
-
ஒரு கேள்வி ஒரு பதில்... சிறு ரப்பர் தொழில்களுக்கு எளிய கடனுதவி அவசியம்