இலவச வீட்டு மனைப்பட்டா: சப் கலெக்டரிடம் மனு

திண்டிவனம்: திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷிடம் கிராம மக்கள் இலவச மனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர்.

மயிலம் சட்டசபை தொகுதி, நடுவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஊராட்சி தலைவர் செந்தில் தலைமையில் அளித்த மனு:

நடுவனந்தல் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் கிராம மக்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement