மண் அரிப்பால் சேதமடைந்த சாலைகள்
மண் அரிப்பால் சேதமடைந்த சாலைகள் :நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும்
காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு வழியாக வாலாஜாபாத், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பேருந்து நிறுத்தம் அருகில், கழிவுநீர் வடிகால் மூடியை சுற்றி மண் அரிப்பால் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக கல்லுாரி மாணவியர் அடிக்கடி விழுகின்றனர்.
இதேபோல, இத்தெருவில் மேலும், மூன்று இடங்களில், கழிவுநீர் வடிகால் மூடியை சுற்றி சாலை சேதடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சேதமான சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.எஸ்.சுந்தரமூர்த்தி,
காஞ்சிபுரம்.
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'