பூசாரி கண் தானம்

நெல்லிக்குப்பம்: மின்சாரம் தாக்கி இறந்த பூசாரியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் கந்தசாமி தெருவை சேர்ந்த ராமு,38; வான்பாக்கம் சாலையில் உள்ள செல்லியம்மன் கோவில் பூசாரியான இவர், நேற்று (அக்.,25) மதியம் கோவில் தளத்தில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்ற சென்றபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.

அவரது கண்களை தானமாக வழங்க, அவரது மனைவி லட்சுமிபிரபா, தந்தை மண்ணாங்கட்டி மறஅறும் குடும்பத்தார் முன்வந்தனர். அதன்படி ராமுவின் கண்களை கடலூர் அரசு மருத்துவமனை டாக்டர் குழுவினர் தானமாக பெற்றனர்.

Advertisement