கடலுார் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை
கடலூர்: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலுார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டி கடலுார் மாவட்ட மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லாததால் மார்க்கெட்டிற்கு குறைந்தளவு மீன்களே விற்பனையாகின. கனமழை காரணமாக மீன் மார்க்கெட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பொதுமக்கள் வருகை தந்தனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகூர் பகுதியில் 7 ஏரிகள் நிரம்பின
-
முதல்வர் தொகுதி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீர்: பொதுமக்கள் அவதி
-
கலை பண்பாட்டுத்துறை கணக்கு அதிகாரிக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
-
புதிய டிரான்ஸ்பார்மர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
-
நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
-
பழநி நில மோசடி வழக்கில் 5 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., குற்றப்பத்திரிகை தாக்கல்
Advertisement
Advertisement