முதல்வர் தொகுதி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீர்: பொதுமக்கள் அவதி

வில்லியனுார்: முதல்வர் தொகுதியில் மழைநீர் வடியாமல் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்த வருகின்றனர்.

முதல்வர் ரங்கசாமியின் மங்கலம் தொகுதி உள்ளது ஆரியபாளையம் கிராமம் . இந்த கிராமத்தை சுற்றி கலத்துமேடு, அருண் நகர், அனுசுயா நகர், ஸ்ரீ லட்சுமி உள்ளிட்ட பகுதி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது இந்த நகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்துவிடுவதால் குடியிருக்கும் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

கடந்த இரு தினங்களாக பெய்ந்த தொடர் மழையால், இந்த நகர் பகுதி முழுவதும் மழை நீர் வெளியேர முடியாமல் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. மேலும் சில வீடுகளிலும் மழைநீர் பகுந்துள்ளதால் படுத்து உறங்க இடமில்லாமல் சாலைக்கு வந்துள்ளனர். மழை காலங்களில் வீடுகளில் மழை நீர் புகுவதுடன், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகளும் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி இழந்து வீட்டிற்குள் செல்ல முடியாமல் தவித்த வருகின்றனர்.

காலத்துமேடு, அருண் நகர் உள்ளிட்ட புதிய நகர் பகுதியில் செல்லும் பாசன வாய்க்கால் ஒட்டிய பகுதி மனையினர் வீடு கட்டும் போது , பாசன வாய்க்காலையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழைநீர் வெளியேர முடியாமல் குடியிருப்பு பகுதியில் குளம்போன்று தேங்கி நிற்கிறது.

முதல்வர் முயற்சி செய்து புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம், வருவாய்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூட்டாக இணைந்து குடியிப்பு பகுதியில் செல்லும் வாய்க்கால் பகுதியை அடையாளம் கண்டு, அளவிடு செய்து வாய்க்கால் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீரை வெளியேற்ற உத்தரவிடவேண்டும், என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement